டீக்கு முன் தண்ணீரா? நிபுணர் கூறிய அறிவியல் காரணம்
நம்மிள் பலர் பொதுவாகவே டீ பிரியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் காலையில் எழுந்ததும் படுக்கையில் இருந்து கூட டீ இல்லாமல் எழுந்திருக்கமாட்டார்கள். ஆனால், வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். வயிற்றில் செரிமான அமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக அசிடிட்டி பிரச்சினையுள்ளவர்கள் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். டீ அல்லது காபியில் உள்ள காஃபின் மற்றும் டானின் அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
டீ குடிப்பவர்களுக்கு அமிலத்தன்மை அதிகமாக இருந்தால், அதனை எப்படி கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என நிபுணர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். அப்படியாயின், வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில மருத்துவத் தகவல்கள் பற்றிப் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் டீயா?
நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிய பின்னர், முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் செரிமானக் கோளாறுகளை தடுக்கலாம்.
தினமும் காலையில் டீ அருந்துவதற்கு முன் தண்ணீர் குடிப்பது பல நோய்களுக்கு தீர்வாக அமையும் என நிபுணர் ஒருவர் கூறியது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு தண்ணீர் குடிப்பது சிரமமாக இருந்தால், அவர்கள் இளநீர் குடிக்கலாம். இது வயிற்றில் இருக்கும் அமிலத்தை வெளியேற்ற உதவும்.
ஆபத்து நிச்சயம்
விருப்பத்துடன் டீ குடிக்கும் பிரியர்களுக்கு டீயில் இருக்கும் காஃபினின் விளைவுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, வயிற்று எரிச்சல், தலைசுற்றல், மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை முற்றிலும் நீங்கிவிடும் என சொல்ல முடியாது. மாறாக, டீயால் ஏற்படும் அமிலத்தன்மை இல்லாமல் போகும் என இரைப்பை குடல் நிபுணர்கள் கூறுகிறார்கள். டீ குடிப்பதற்கு முன் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால், அது வயிற்றில் உள்ள அமில கார சமநிலையை சீராக வைத்துக் கொள்ளும். டீக்கு பதிலாக ஒரு சிறிய சிற்றுண்டி அல்லது சில பழங்களை கூட எடுத்துக்கொள்ளலாம்.
டீ-க்கு பதிலாக இதை குடிக்கலாம்
பால் சேர்த்த டீ குடிக்கும் ஒருவர், அதற்கு பதிலாக மூலிகை டீ, கிரீன் டீ, அல்லது பிளாக் டீ குடிக்கலாம். அதேபோன்று, பாலில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் அமிலப் பிரச்சனையை அதிகப்படுத்தும்.
பால் டீ கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், தேயிலையை பாலுடன் போட்டு கொதிக்க வைக்காமல் தனியாகக் கொதிக்க வைத்து குடிக்க முயற்சி செய்யலாம். உதாரணமாக, பிளாக் டீ தயாரித்து, அதனுடன் பால் சேர்த்து குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்து விட்டு, பகலில் எண்ணெய் உணவுகள், காரம், அல்லது ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டால் வயிற்றில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அசிடிட்டி பிரச்சினையுள்ளவர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்றுவது அவசியம்.
The article discusses the health risks of drinking tea on an empty stomach, particularly for those with acidity issues. It explains that the caffeine and tannins in tea increase stomach acidity. A specialist suggests that drinking water before tea can help balance the stomach’s acid levels and prevent problems like heartburn and dizziness. As an alternative, one can also have tender coconut water or herbal tea. The article concludes by emphasizing the importance of healthy eating habits for those with acidity problems.