கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில், நேற்று (19) மாலை 4:10 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, கைவிடப்பட்ட பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அந்தப் பையை மீட்டு, ரயில் அதிபரிடம் ஒப்படைத்தனர். பையைத் திறந்து சோதித்தபோது, அதில் 252 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் ‘ஐஸ்’ (Ice) வகை போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், அந்தப் பையை மீட்டு, அதிலிருந்த போதைப்பொருளைக் கைப்பற்றினர்.
இந்த போதைப்பொருளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பெருங்குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
__________________________________________________________________
An abandoned bag containing 200 grams of ‘Ice’ drug, divided into 252 packets, was discovered on a train traveling from Colombo to Batticaloa. The bag was found yesterday (19) at 4:10 PM upon the train’s arrival at the Batticaloa railway station. Railway security officers found the bag and handed it over to the station master, who then informed the police. The Batticaloa Headquarters Police have seized the drugs and are conducting further investigations.


