தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் நேற்று (19) இரவு, குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவியையும் மகனையும் தாக்கியதில், 35 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தேவாலேகம பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் பட்டுவத்த, ஹெலமட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். ஆரம்பகட்ட விசாரணைகளில், இத்தாக்குதல் ஒரு தடியால் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
சடலம் மீதான நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில், தேவாலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
In the Pattuvatta area of the Devalegama police division, a man tragically killed his 35-year-old son during a domestic dispute last night (19). The man also assaulted his wife, who has been admitted to the Kegalle Hospital with injuries. Police have launched an investigation into the incident, which preliminary findings suggest was carried out with a stick. The victim, who was from the Helamada area, will undergo a magisterial inquiry. Devalegama police are continuing their investigation.