வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மோட்டார் வாகனம் மோதி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம், அதன் சாரதி, மற்றும் உரிமையாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, கனகராயன்குளம் பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம், சம்பவ இடத்தில் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் 32 வயதான நான்கு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடி வந்த பொலிஸார், விசுவமடுவில் வைத்து வாகனத்தையும், அதன் சாரதி மற்றும் உரிமையாளரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், வாகனத்தின் நிறம் மற்றும் வடிவத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பிடிபட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜெயதிலக்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
A vehicle that hit and killed a woman in Kanagarayankulam, Vavuniya, was recovered, and two suspects were arrested. The victim, a 32-year-old mother of four, was on her way to the police station when the incident occurred on the night of the 16th. The driver and owner of the vehicle were arrested in Viswamadu while they were attempting to alter the vehicle’s appearance to evade identification.