கட்டான – கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.
கட்டானவில் உள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மூழ்கியவர், மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணைகளில், அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது இந்தச் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
___________________________________________________________________
A 23-year-old man from Maskeliya, Moussakelle, drowned in a hotel swimming pool in the Katana-Kandawala area. Initial investigations reveal that the incident occurred while he was swimming with several friends. The Katana Police are conducting further investigations.