கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்களுக்கான கழிப்பறை ஒன்றில் இருந்து 18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
கழிவறையில் சந்தேகத்திற்குரிய பொட்டலங்கள் இருப்பதைக் கண்ட தூய்மைப் பணியாளர் ஒருவர் உடனடியாக விமான நிலைய சுங்க மற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்தப் பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 422 கிராம் குஷ் கஞ்சா மற்றும் 1.262 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் ஆகியவை, விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக, போதைப்பொருளைக் கொண்டு வந்தவர்கள் மற்றும் அதை அந்தப் பகுதி வழியாக கடத்த முயற்சித்தவர்கள் குறித்த விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
A significant haul of Kush and Hashish drugs, valued at over Rs. 18.47 million, was recovered from a men’s restroom at the Katunayake Bandaranaike International Airport. The discovery was made by a cleaning staff member who alerted airport authorities, leading to the seizure of the narcotics. An investigation is currently underway to identify those responsible for the smuggling attempt.