அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, பாடசாலை ஒன்றில் பயிலும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அந்தப் பாடசாலையின் நிர்வாகக் குழுவில் பொருளாளராகப் பணியாற்றியவர்.
கைது செய்யப்பட்டவர் 62 வயதுடைய மாற்றுத்திறனாளி. செவித்திறன் குறைபாடுள்ள தனது மகனைப் பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல வந்த தாய், குழந்தையைக் காணாததால் தேடியுள்ளார். அப்போது, கிணற்றின் அருகிலிருந்து ஓடிவந்த மகனிடம் விசாரித்தபோது இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து, அந்தத் தாய் அளித்த புகாரின் பேரில் சந்தேகநபர், பல கடுமையான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள அந்தச் சிறுவர்களிடமிருந்து சைகை மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். அப்போது, பாடசாலையின் பொருளாளராகப் பணியாற்றி வந்த அந்த நபர், பல சந்தர்ப்பங்களில் இந்தச் சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அடிக்கடி பாடசாலைக்கு வருவார், இருட்டிய பின்னரே திரும்புவார் என்றும், மேலும் அவர் மாணவர்கள் தங்கும் இடங்களுக்கு வந்து கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு விளக்குகளை அணைப்பார் என்றும் வாக்குமூலங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
_________________________________________________________________
An Anuradhapura police investigation led to the arrest of a 62-year-old retired soldier, who served as the treasurer of a school’s management committee, on charges of sexually abusing three minors aged 10, 12, and 13. The incidents came to light after the mother of a deaf and speech-impaired student filed a complaint. Police, with the help of a sign language interpreter, recorded statements from the victims. The statements revealed that the suspect would frequently visit the school and abuse the children, often staying until after dark and locking them in rooms.