தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,669 மில்லியன் ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளது என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நெல், சோளம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர்ச்செய்கைகளுக்காக 81,234 விவசாயிகளுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகச் சபை கூறியுள்ளது.
அத்துடன், கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல வகையான கால்நடைகள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் நிதிச் சொத்துக்கள் 2,491 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________________
The Agricultural and Agrarian Insurance Board has announced that 1,669 million rupees have been disbursed under the National Crop Insurance Scheme. This aid benefited 81,234 farmers engaged in cultivating paddy, maize, chili, and potatoes. Furthermore, the board has implemented various livestock and goat insurance schemes and noted that its financial assets have increased to 2,491 million rupees this year.