ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றச் சிறைக்கூடத்தில் நேற்று (26) இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட நபர் கடந்த 21ஆம் திகதி 2400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், குறித்த நபர் இன்று (27) விசாரணைக்காக சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, திறந்த நீதிமன்றச் சிறையில் அடைக்கப்பட்டார். பதில் நீதவான் முன்னிலையில் நீதிமன்ற நடவடிக்கை நடந்துகொண்டிருந்தபோது, அந்த நபர் சிறைக் கழிப்பறைக்குள் சென்று தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மீது ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகளும் நான்கு போதைப்பொருள் வழக்குகளும் பதிவாகியுள்ளன.
________________________________________________________________________
A father of two committed suicide yesterday (26th) inside the Eravur Tourism Court prison cell, according to Eravur Police. The individual had been arrested on the 21st with 2400 mg of heroin and was in remand custody. The incident occurred today (27th) while he was detained in the open court cell awaiting his hearing; he reportedly went to the washroom and committed suicide. The deceased had previous records, including two theft cases and four drug-related cases.