Sunday, September 28, 2025

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; சம்பவம் குறித்து விசாரணை!

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டை – சாவல்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவரத்தினம் சந்தோஷ் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

இந்த இளைஞர் நேற்று (26) அதிகாலை 3:30 மணியளவில் தனது சித்தப்பாவுடன் கடற்றொழிலுக்காக காக்கைதீவு கடற்பகுதி வழியாக மண்டைதீவு கடலுக்குச் சென்றார்.

அவர்கள் களங்கண்டி முறையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இளைஞரைக் காணாததால், அவரது சித்தப்பா கடலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அந்த இளைஞர் களங்கண்டி தடியைப் பிடித்தபடி மயக்க நிலையில் இருப்பதைக் கண்டார்.

பின்னர், இளைஞரைப் படகில் ஏற்றி குருநகர் இறங்குதுறைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோதிலும், சிறிது நேரத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மானிப்பாய் பொலிஸார் சாட்சிகளை ஒழுங்குபடுத்திய நிலையில், உடற்கூறு பரிசோதனைகளில் நீரில் மூழ்கியதால் மரணம் நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது.

________________________________________________________________________

A 17-year-old youth named Sivarathinam Santhosh from Aanaippottai, Savalkattu, drowned yesterday (26th) while fishing off the Mandaitheevu coast near Kaakaiththeevu with his uncle. While fishing using the Kalangandi method, the uncle found the youth unconscious, holding onto a fishing pole. Despite being rushed to Jaffna Teaching Hospital, the youth passed away. A post-mortem examination, following an inquiry by the sudden death investigation officer, confirmed that the death was due to drowning.

Hot this week

மதரசா கழிவறைக்குள் 40 சிறுமிகள் பூட்டி வைப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி விபரீதம்!

இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு லாபம் வருமானம் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

மரத்தில் மோதி வேன் கோர விபத்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம்...

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி பெண் உயிரிழப்பு; பரபரப்பு.!

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில்...

அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து பயணிகளின் நிலை என்ன?**

இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு...

Topics

இலங்கைக் கணவனுடன் வந்த இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி வெளியான தகவல்!

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின் ரூ....

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்; பதற்றம்!

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img