Tuesday, October 14, 2025

வேலை இல்லாததால் உறவில் பிரிவு; காதலியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன் கைது

மதுரை சேர்ந்த 19 வயது இளைஞன், தனது 17 வயது காதலி வேறு வாலிபரிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்து கல்லால் அடித்துப் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மதுரையில் உள்ள ஊமச்சிகுளம் அருகே சின்ன மாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா (19 வயது). பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த இவர், சிவகாசியைச் சேர்ந்த தனது தாய்மாமன் மகளான பிரதீபா (17 வயது) என்ற நர்சிங் கல்லூரி மாணவியைக் காதலித்து வந்துள்ளார். பிரதீபா அண்மைக் காலமாக கல்லூரிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஜெயசூர்யா வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், அவருடன் பேசுவதைப் பிரதீபா நிறுத்தியதாகத் தெரிகிறது. அத்துடன், அவர் வேறு ஒருவருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, பிரதீபாவுடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்து திட்டியுள்ளார்.

இந்த நிலையில், வேறு யாருடனும் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பிரதீபாவை அவர் எச்சரித்துள்ளார். இதற்கு அவர் மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் அழகர்கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரதீபாவை ராஜாக்கூர் கண்மாய் கரைக்கு ஜெயசூர்யா அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, வேறு யாருடனும் பேசக்கூடாது என்று பிரதீபாவிடம் அவர் பிரச்சினை செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, கீழே கிடந்த கல்லால் பிரதீபாவை அடித்துப் படுகொலை செய்தார். சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஜெயசூர்யா ஒத்தக்கடை பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

_______________________________________________________________

A shocking incident occurred in Madurai, India, where a 19-year-old youth named Jayasurya murdered his 17-year-old girlfriend, Prathiba, by violently hitting her with a stone. The two were in a relationship, but the youth became enraged after the student began to distance herself due to his unemployment and reportedly spoke to another person. Jayasurya lured her to Rajaakkoor Kanmai (tank) embankment under the pretext of taking her to Alagarkovil, where a heated argument ensued. After the murder, Jayasurya surrendered to the Othakadai Police, who have registered a case and arrested him.

Hot this week

Vacancy Data entry operator

LCP DISTRIBUTOR Data entry operator (female) computer knowledge in excel and...

Vacancy Delivery Boy

LCP DISTRIBUTOR Delivery Boy vacancy available No bike needed Age below 35 Salary...

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற இலங்கையர் மேற்கொண்ட மோசமான செயல்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் இலங்கையர் ஒருவர் கைது...

Vacancy Admin Assistant

🚨 WE’RE HIRING! 🚨 Are you looking to start or...

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; துயரில் உறைந்த குடும்பம்

பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி...

Topics

Vacancy Data entry operator

LCP DISTRIBUTOR Data entry operator (female) computer knowledge in excel and...

Vacancy Delivery Boy

LCP DISTRIBUTOR Delivery Boy vacancy available No bike needed Age below 35 Salary...

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற இலங்கையர் மேற்கொண்ட மோசமான செயல்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் இலங்கையர் ஒருவர் கைது...

Vacancy Admin Assistant

🚨 WE’RE HIRING! 🚨 Are you looking to start or...

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; துயரில் உறைந்த குடும்பம்

பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி...

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32)....

பல அரச நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகள் தடைபட்டது

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில்...

நாளை முதல் இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ETA கட்டாயம்

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img