யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் கரவெட்டி மத்தி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியர் ஆவார். அவர் குருநகர் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு அவரது உறவினர் ஒருவர் அந்த அறைக்குச் சென்றபோது, அந்த ஆசிரியர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், அவரது சடலத்தை மீட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் உயிரிழந்ததற்கான சரியான காரணம், உடற்கூற்றுப் பரிசோதனை முடிவிலேயே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A 30-year-old teacher from a renowned school in Jaffna, who hailed from Karaveddy Centre, Karaveddy, has died under suspicious circumstances. The teacher was residing in a rented room in Gurunagar, where a relative found him deceased last night. The body has been recovered and transferred to the Jaffna Teaching Hospital for a post-mortem examination.



