இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருட்களின் விலையில் இன்று (செப்டம்பர் 30) திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தக் கொள்கைக்கு அமைய, இந்த முறை எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையில், கடந்த மாத எரிபொருள் விலை திருத்தத்தின்படி, 92 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை ரூ. 6 ஆல் குறைக்கப்பட்டது நினைவூட்டத்தக்கது. அத்துடன் மேலும் சில எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
Fuel prices currently in effect in Sri Lanka are expected to be revised today (September 30), with the changes likely to be announced and implemented from midnight, in line with the monthly fuel price revision policy. It is noted that during the last revision, the price of a litre of 92 Octane petrol was reduced by six rupees, along with changes to some other fuel types.


