பிள்ளைகள் அதிகநேரம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் அதிக நேரம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவது, அவர்களுக்கு மூளை சார்ந்த பிரச்சினைகளை மட்டுமல்லாமல், உடல்சார்ந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிள்ளைகள் தொடர்ந்து அதிக நேரம் குனிந்த நிலையில் கைத்தொலைபேசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், அவர்களுக்கு கழுத்து மற்றும் முதுகெலும்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தோற்றத்தில் மாற்றம்
மேலும், இந்த அதிகப்படியான பயன்பாட்டால் கழுத்து, தோள்பட்டைப் பகுதிகளில் வலி ஏற்படுவதுடன், முதுகெலும்பின் அடுக்கிலேயே மாற்றங்கள் ஏற்பட்டு, பிள்ளைகள் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பழக்கம் நாளடைவில் பிள்ளைகளின் தோற்றத்தையே மாற்றக்கூடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணமாக, பிள்ளைகள் முன்பைப் போல வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடாததே காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கைத்தொலைபேசியில் மூழ்கிக் கிடக்கும் பிள்ளைகளுக்கு இந்த உடல்ரீதியான பிரச்சினைகளில் இருந்து தீர்வு காண்பதற்கு, யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை அளிப்பது நல்லது. அத்துடன், சரியான முறையில் எவ்வாறு அமர்வது என்று கற்றுக் கொடுப்பது, மற்றும் சரியான தலையணையைப் பயன்படுத்துவது ஆகியவையும் மிகவும் நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Doctors are warning that children’s excessive use of mobile phones can lead to not only brain-related issues but also significant physical problems, particularly affecting their posture and spine. Constantly looking down at phones increases the risk of neck and spinal injuries, leading to pain and potential long-term changes in posture. Doctors advise that practicing yoga and exercise, teaching proper sitting techniques, and using correct pillows are essential steps to mitigate these physical risks, which are largely exacerbated by a lack of outdoor play.


