கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முகமாலை வேம்படுகேணிப் பகுதியில், ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (அக்டோபர் 02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்து ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய ஒரு டிப்பர் வாகனம் ரயில் மார்க்கத்திலேயே கவிழ்ந்தது. இதனால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க, பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அந்த வாகனத்தை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனங்களில் ஒன்று யாழ்ப்பாணத் திசையிலிருந்தும், மற்றொன்று கிளிநொச்சித் திசையிலிருந்தும் பயணித்தவை ஆகும். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ஒரு பேருந்து பயணிகளை இறக்குவதற்காக அப்பகுதியில் நின்றபோது, அதைப் பின்னால் வந்த டிப்பர் வாகனம் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் இரு டிப்பர் வாகனங்களின் சாரதிகளும் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் உடனடியாக பளைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Two tipper trucks collided head-on near a railway crossing in Mugamalai Vempadukeni, Kilinochchi, last night (October 2), resulting in one truck overturning onto the railway line, which required a backhoe machine to clear it. The accident occurred when one truck attempted to overtake a stationary bus. Both tipper drivers were injured in the crash and admitted to the Palai Regional Hospital, with Palai Police currently investigating the incident.