அமெரிக்காவில் இருதயநோய் நிபுணராகப் பணியாற்றிய இலங்கை வைத்தியர் ஒருவர், கட்டார் ஏர்வேஸில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குப் பயணித்தபோது, விமானத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த குறித்த வைத்தியர், தமக்குச் சைவ உணவு வேண்டுமெனக் கோரியுள்ளார். ஆனால், விமானப் பணியாளர்கள் சைவ உணவை வழங்க மறுத்துள்ளனர். பின்னர், அவருக்கு இறைச்சியுடன் வழங்கப்பட்ட உணவை அவர் உண்ண முற்பட்டபோது, உணவு சிக்கி மூச்சுத் திணறியதால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர்.
விமானியின் பொய்யான தகவல்
85 வயதான அசோகா ஜெயவீர என்ற மருத்துவ வல்லுநரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் நடந்தபோது, விமானம் ஆர்க்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்துகொண்டிருந்ததால், அவசர சிகிச்சைக்காக விமானத்தைத் தரையிறக்க முடியவில்லை என அதன் விமானி ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்தத் தகவலை மறுத்துள்ள உயிரிழந்த வைத்தியரின் மகன், சம்பவம் நடந்த நேரத்தில் விமானம் உண்மையில் மத்திய மேற்குப் பகுதிக்கு மேல் இருந்ததாகவும், அது எளிதில் திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவத்தை அடுத்து, விமானம் இறுதியாக ஸ்கொட்லாந்தின் எடின்பர்க்கில் தரையிறங்கியபோது, சைவ உணவு மட்டுமே உண்ணக்கூடியவராக இருந்த ஜெயவீர, ஏற்கனவே சுமார் மூன்றரை மணி நேரம் மயக்கமடைந்திருந்தார் என்று அவரது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் பின்னரே அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அது ஏற்கனவே தாமதமாகியிருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிறுவனம் மற்றும் விமானியின் செயல்பாடுகள் குறித்துக் குடும்பத்தினர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
A Sri Lankan doctor, an 85-year-old cardiologist named Ashoka Jayaweera from Southern California, died while traveling from the US to Sri Lanka on a Qatar Airways flight. His family alleges that he choked and suffocated after being forced to eat a meal containing meat, as his request for a vegetarian meal was denied. Furthermore, the family claims the pilot falsely stated the plane was over the Arctic Ocean to justify not making an emergency landing for medical aid, when the aircraft was actually over the US Midwest and could have been easily diverted. By the time the flight landed in Edinburgh, Scotland, the doctor had been unconscious for approximately three and a half hours, leading to his death upon arrival at the hospital.