திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). பால் கறக்கும் தொழிலாளி.
ராமச்சந்திரனுக்கும் (32), அதே பகுதியில் வசித்து வரும் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஆர்த்திக்கும் (21) இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. ராமச்சந்திரன் ஒரு பால் கறக்கும் தொழிலாளி ஆவார்.
காதல் திருமணம்
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக, மாமனார் சந்திரன், தனது மருமகன் ராமச்சந்திரனுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, ஊரின் பாசனக் கால்வாய் அருகே வந்த ராமச்சந்திரனை சந்திரன் வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது, சந்திரன் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து சந்திரனைக் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A 32-year-old milk vendor named Ramachandran from Kootathu Ayampalayam in Dindigul District was murdered by his father-in-law, Chandran, after Chandran had frequently quarrelled with him over Ramachandran’s love marriage three months ago to Chandran’s daughter, Aarthi (21), who was a college student, as the couple belonged to different communities. Chandran intercepted Ramachandran near an irrigation canal and hacked him with a sickle, killing him instantly; the police have since registered a case and arrested Chandran for the murder.