Thursday, October 16, 2025

வரதட்சணையை மறுத்த மனைவிக்கு கணவரின் அதிர்ச்சி செயல்; கோவிலில் பரபரப்பு கடிதம் மீட்பு

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி (வயது 28). இவருக்கு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த விஜய் (30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பாரதியைக் காணவில்லை. அவர் அவருடைய தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் விஜய் கூறிவந்தார்.

கோவிலில் கடிதம்

பாரதியின் அண்ணன் மாருதி திடீரென விஜய்யின் வீட்டுக்கு வந்தபோது, பாரதி அங்கு வரவில்லை என்று கூறினார். இதனால், பாரதி எங்கோ மாயமாகிவிட்டதாகப் பதற்றமடைந்த மாருதி பொலிஸில் புகார் அளித்தார்.

இதற்கிடையில், விஜய் தனது மைத்துனர் மாருதியை அழைத்துக்கொண்டு கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்றார். அங்கு பாரதி பத்திரமாக வீடு வந்து சேரும்படி பூஜை செய்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், பலரும் வேண்டுதல் நிறைவேற வேண்டி கோவிலில் உள்ள மரத்தில் ஒரு கடிதம் எழுதி ஆணி அடித்து வைப்பது வழக்கம். அந்த மரத்தின் அருகில் சென்று பாரதியின் அண்ணன் மாருதி பார்த்தபோது, அவரது கண்ணில் விஜய் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் தென்பட்டது. உடனே அந்தக் கடிதத்தை எடுத்து மாருதி படித்தார்.

அதில் விஜய், “என் மனைவி தினமும் பேயாக வந்து என்னை பயமுறுத்துகிறாள். அவளால் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் எந்தப் பிரச்சினையும், தொந்தரவும் ஏற்படக்கூடாது” என்று எழுதி இருந்தார். இதனால் மேலும் பதற்றம் அடைந்த மாருதி, உடனே இதுபற்றிப் பொலிஸில் புகார் செய்தார்.

அதன்பேரில் பொலிஸார் விஜய்யைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், தனது மனைவி பாரதியை கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் வீசிவிட்டதாகப் பகீர் தகவலை வெளியிட்டார்.

அதாவது, விஜய் ஒரு கார் வாங்கியுள்ளார். அந்தக் காருக்கு ரூ.2 லட்சம் தவணை செலுத்த வேண்டி இருந்தது. அந்தப் பணத்தை வரதட்சணையாக வாங்கி வரும்படி பாரதியிடம் விஜய் வற்புறுத்தியுள்ளார். அதற்கு பாரதி மறுக்கவே, அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்று உடலை ஆழ்துளைக் கிணற்றில் வீசியதும், அதன்பின்னர் பேயாக வந்து மனைவி பயமுறுத்துகிறாள் என்று கருதி, கோவிலில் உள்ள மரத்தில் விஜய் கடிதம் எழுதி ஆணி அடித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து பொலிஸார் விஜய்யைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

A man named Vijay (30) from Halaghatta village in Karnataka confessed to murdering his 28-year-old wife, Bharathi, and dumping her body in a borewell behind their house, after she refused his demand for a dowry of Rs. 2 lakh to pay off a car loan installment. The crime was exposed after Bharathi’s brother, who was searching for her, found a letter written by Vijay nailed to a temple tree, claiming that his wife’s ghost was haunting him, leading to police interrogation and the shocking confession; police have arrested Vijay and are investigating further.

Hot this week

Vacancy; அலுவலக பெண் பணியாளர்கள் தேவை

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

Bigg Boss Tamil 9; கம்ருதினால் வெட்கப்பட்ட பார்வதி—பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக் பாஸில் பார்வதியும் கம்ருதினும் ஒருவருக்கொருவர் மார்க் போட்டு பேசிய விடயங்கள்...

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்தவர்களுக்கு கடும் அபராதம் விதிப்பு

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட...

யாழில் புதிய வகை திருட்டு சம்பவம்; விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா...

Vacancy Cake Bakers

Luxury cake Vavuniya Vacancy Open (Female) Experience in icing cake...

Topics

Vacancy; அலுவலக பெண் பணியாளர்கள் தேவை

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

Bigg Boss Tamil 9; கம்ருதினால் வெட்கப்பட்ட பார்வதி—பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக் பாஸில் பார்வதியும் கம்ருதினும் ஒருவருக்கொருவர் மார்க் போட்டு பேசிய விடயங்கள்...

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்தவர்களுக்கு கடும் அபராதம் விதிப்பு

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட...

யாழில் புதிய வகை திருட்டு சம்பவம்; விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா...

Vacancy Cake Bakers

Luxury cake Vavuniya Vacancy Open (Female) Experience in icing cake...

பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217...

தமிழர் பகுதியில் உழவியந்திரம்–டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து

கிளிநொச்சி - பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரமும்...

விடுதி அறையில் இளைஞர் மர்ம மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை ஆரம்பம்.

கம்பஹா, பலகல்ல பகுதியிலுள்ள தற்காலிக விடுதி அறையில் இளைஞர் ஒருவரின் சடலம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img