யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் – கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: குறித்த பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி பிறந்துள்ளது.
நேற்றையதினம் (அக்டோபர் 29) குழந்தையின் தாயார் குழந்தைக்குப் பாலூட்டிய சிறிது நேரத்தில் அந்தக் குழந்தை திடீரென சுகவீனமுற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்தக் குழந்தையைப் பெற்றோர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே குழந்தை இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
A 3-month-old baby girl, born on July 23rd, belonging to a couple from the Nallinakkapuram area of Keerimalai, Jaffna, tragically died yesterday (the 29th). The incident occurred shortly after the mother breastfed the baby, who then suddenly became ill. The parents immediately rushed the child to the Tellippalai Hospital, but the baby was pronounced dead upon arrival. The body has been sent to the Jaffna Teaching Hospital for a post-mortem examination.


