சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
எனவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The Department of Meteorology has forecast rain or thundershowers in the Sabaragamuwa, Central, Uva, and Northern provinces, as well as the Trincomalee district, after 2:00 PM.
Fair weather will prevail in the rest of the country.
Misty conditions are likely to occur in some places in the Central, Sabaragamuwa, Uva provinces, and the Ampara district during the morning hours.
The public is advised to take necessary precautions to minimize damages from strong temporary winds and lightning activity that may occur during thundershowers.


