திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள லண்டன் தொழிலதிபரின் முன்பிணை மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் கதம் என்பவர் மீது பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.
ஆலோசனை கட்டணம்
அதில், லோனாவாலா மற்றும் பஹல்காம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று, கதம் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருந்தார்.
தனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இந்தச் கொடூரத்தில் கதம் ஈடுபட்டதாகவும், ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் தன்னிடமிருந்து அவரும் அவரது சகோதரரும் பணம் பெற்று ஏமாற்றியதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில், கதம் மற்றும் அவரது சகோதரர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க, கதம் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கதம்-இன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட அன்று கதம்-இன் தந்தை இறந்தபோதுகூட அவர் இறுதிச் சடங்கிற்காக இந்தியாவுக்குத் திரும்பவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தற்போது உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், கதம்-ஐ கைது செய்வதற்கான தடை நீங்கியுள்ளது. அதனால் பொலிஸார் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
The Mumbai High Court has rejected the anticipatory bail application of a London-based Indian-origin businessman, Kadam, who is currently absconding in a case where he allegedly repeatedly sexually assaulted a woman under the false promise of marriage.
A woman from the Andheri area of Mumbai, Maharashtra, filed a sensational sexual assault complaint against Kadam, alleging that he sexually assaulted her multiple times after taking her to locations like Lonavala and Pahalgam. She further claimed that Kadam perpetrated these acts by concealing his marital status and luring her with a promise of marriage. The woman also alleged that Kadam and his brother defrauded her by taking money under the guise of “consultation fees.”
Following the complaint, a case was registered against Kadam and his brother under various sections. The High Court, after hearing Kadam’s anticipatory bail application, rejected the plea, noting that Kadam did not even return to India for his father’s funeral on the day the case was registered. With the rejection of the bail plea, the police have intensified their efforts to arrest him.


