அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த UPS 2976 என்ற விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானம் லூயிஸ்வில்லிலிருந்து ஹொனலுலுவில் உள்ள டேனியல் கே. இனூயே சர்வதேச விமான நிலையத்திற்குச் புறப்பட்ட நிலையில், நேற்று (நவம்பர் 04), உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
புறப்பட்ட உடனேயே விமானத்தில் இயந்திரக் கோளாறு அல்லது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புறப்படும்போதே விமானத்தின் இடது இறக்கையில் தீ எரிந்ததாக சில காணொளிகள் காட்டுகின்றன.
சரக்கு விமானமான இதில் மூன்று விமானப் பணியாளர்கள் மட்டுமே இருந்ததாக UPS உறுதி செய்துள்ளது. விமானப் பணியாளர்களின் நிலை குறித்து உறுதியான தகவல் இல்லை.
விமானம் தரையில் விழுந்தபோது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ ஒரு மைல் தூரத்திற்குப் பரவியது மற்றும் இதனால் கரும்புகை வானில் சூழ்ந்தது.
விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர் விமானத்தில் இல்லாத, அருகில் இருந்தவர்கள் எனத் தெரிகிறது.
விபத்து நடந்த லூயிஸ்வில் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஆகியவை இணைந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன.
A UPS cargo plane (Flight 2976), a McDonnell Douglas MD-11 model, crashed shortly after departing from the Louisville Muhammad Ali International Airport in Kentucky yesterday (November 04) around 5:15 PM local time. The flight was en route to Honolulu.
Initial reports suggest the aircraft experienced an engine failure or fire immediately upon takeoff, with video footage showing flames on the plane’s left wing. UPS confirmed that there were only three crew members on board the cargo plane.
The crash resulted in a massive fire and explosion on the ground, causing a thick plume of black smoke. Kentucky Governor Andy Beshear reported that at least seven people have been killed and 11 others injured, with authorities expecting the death toll to rise. It has been confirmed that at least four of the fatalities were not onboard the aircraft, but were on the ground in the industrial area where the crash occurred.
The Louisville airport was temporarily closed, and residents in the surrounding area were issued a shelter-in-place order. The National Transportation Safety Board (NTSB) and the Federal Aviation Administration (FAA) have launched an intensive investigation to determine the exact cause of the crash.


