Thursday, November 6, 2025

புத்தளத்தில் பெருமளவு கஞ்சா பொதி கைப்பற்றி மீட்பு!

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசியப் பணிக்கு பங்களிக்கும் கடற்படை, நாட்டைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இதன்படி, கற்பிட்டி உச்சமுனை களப்பு மற்றும் கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் படகுகளால்  (நவம்பர் 04) நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலோரப் பகுதியில் இரண்டு சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் கண்காணிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, குறித்த டிங்கி இயந்திரப் படகுகளில் பதினெட்டு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 38 கிலோகிராம் கஞ்சா தொகையுடன் இரண்டு டிங்கி இயந்திர படகுகளும் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் மதிப்பு எட்டு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா மற்றும் டிங்கி படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

The Navy reported the seizure of a large quantity of Kerala Ganja (Cannabis) in the Uchchamunai Lagoon area of Kalpitiya.

As part of the Navy’s ongoing anti-drug operations, conducted in line with the “Whole Country Together” national operation and the vision of a “Drug-Free Nation – Healthy Citizens’ Life,” the Northwestern Naval Command’s patrol boats, attached to SLNS Vijaya, conducted a special search operation yesterday (November 04) in the Kalpitiya Uchchamunai Lagoon and Kalpitiya coastal area.

During the operation, two suspicious dinghy boats were intercepted and inspected. The Navy seized approximately 38 kilograms of Cannabis, concealed in eighteen packages within the two dinghy boats, which were also taken into custody.

The estimated street value of the Kerala Ganja seized is believed to be over eight million rupees. The seized drugs and dinghy boats have been handed over to the Puttalam Police Narcotics Bureau for further legal action.

Would you like a summary of any other recent naval anti-narcotics operations?

Hot this week

யாழில் காணாமல் போன சிறுமி; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் தமது மகளைக் காணவில்லை எனச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்...

தாயின் கண் முன் இளைஞன் நிர்வாணமாக்கி சித்திரவதை; பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை, தாயின் கண் முன் நிர்வாணமாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய...

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

  யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு,...

காதலை நிராகரித்த மாணவிக்கு மீதான கொடூரம்; கொதிக்கும் எண்ணெய் ஊற்றி தாக்கிய காதலன்!

கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்குக் கொடூர தண்டனை கொடுத்த...

யாழில் மாணவிகளையும் இலக்காகக் கொண்ட ஆபத்தான கும்பல்

போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும்...

Topics

அதிபரின் செயல் அம்பலம்; ஹோட்டல் பின்புறத்தில் புதைக்கப்பட்ட பொருள்

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு...

கடலில் மூழ்கி இளைஞன் காணாமல் போனார்!

கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்...

மனைவி கொலை வழக்கில் தப்பிய கணவன்; குழந்தையுடன் பொலிஸில் சரண்!

, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img