இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர், தம்புள்ளையில் உள்ள அவரது அறையில் நேற்று காலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த மாணவியின் மரணம், அவர் உயிரை மாய்த்துக் கொண்டமையினால் ஏற்பட்டுள்ளது என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடலைச் சோதனையிட்டபோது, அவரது மரணத்திற்கான காரணம் இதுவே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சோகமான முடிவை எடுத்தவர் உயிரியல் துறையில் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த 19 வயது மாணவி ஆவார். உறக்கத்தில் இருந்து மாணவி நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், பதற்றமடைந்த அவரது பெற்றோர் தேடத் தொடங்கியுள்ளனர்.
அப்போது, அறையில் அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
A 19-year-old female student, who was scheduled to take the Advanced Level examination in the Biology stream this year, was found dead in her room in Dambulla yesterday morning. A post-mortem examination conducted at the Dambulla Base Hospital confirmed that the student’s death was due to suicide. Her parents discovered her unconscious in her room after she failed to wake up, and doctors pronounced her dead upon her arrival at the hospital. Police are currently conducting further investigations into the incident.



