ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் வசித்து வந்த தொழிலதிபர் ஒருவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி. (HIV) எனப்படும் வைரஸ் தொற்று பாதித்து, எய்ட்ஸ் நோய் (AIDS) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எய்ட்ஸ் நோய் பரிசோதனை
இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்துகொண்டனர். அதில், பிளஸ்-2 படிக்கும் மகளுக்கு மட்டும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லை என்றும், தாய்க்கும், 9 வயது மகனுக்கும் இந்த நோய் கணவரிடம் இருந்து பரவி இருந்தது என்றும் தெரியவந்தது.

இதனால் விரக்தி அடைந்த தாய், மகளிடம், “நம் வாழ்க்கையே நாசமாகி விட்டது” என்று அழுது புலம்பி உள்ளார். மேலும், தங்களுடன் வசித்து வந்தால் பிளஸ்-2 மாணவியான மகளுக்கும் இந்த நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அவர் அதிக அச்சம் அடைந்துள்ளார்.
தானும் மகனும் இதேபோல் உடல்நலக் குறைவால் இனி அவதிப்படத்தானே வேண்டும் என்று பலவிதமாக யோசித்த அவர், ஒரு கட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதித்த மகனைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இரவு உறங்கிக்கொண்டிருந்த மகனின் அருகில் கிடந்த தலையணையை எடுத்து, அசந்து தூங்கிய மகனின் முகத்தில் வைத்து அழுத்தினார். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மகனைக் கொன்ற அந்தப் பெண், தனது சேலையால் அங்கிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையில், பிளஸ்-2 மாணவி நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, தனது கண் எதிரே தாய் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டு இருந்ததையும், தம்பி இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டுத் தொழிலதிபரும், அக்கம்பக்கத்தினரும் அங்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாகச் சிப்காட் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
A shocking incident occurred in Hosur, Krishnagiri district, where a mother committed suicide after killing her nine-year-old son, both of whom had been diagnosed with HIV/AIDS transmitted by her businessman husband. The family underwent testing after the husband fell ill, which revealed the mother and younger son were infected, while the elder daughter (Plus-2 student) was not. Driven by despair and fear that the disease would spread to her daughter, the mother tragically smothered her sleeping son with a pillow and then hanged herself. The daughter discovered the bodies the next morning. SIPCOT Police have registered a case and are investigating the incident.


