வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் முன்பு மூடிய கண்களுடன் காணப்பட்ட பிள்ளையார் சிலை இன்று திடீரென கண் திறந்த நிலையில் தோன்றிய சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தோணிக்கல் பிள்ளையார் கோவிலில் உள்ள இந்த சிலை பல ஆண்டுகளாக மூடிய கண்களுடன் இருந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் பீடத்தை தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் இன்று மாலை நேரத்தில் வழக்கம்போல் வழிபாட்டிற்கு வந்த பக்தர்கள், சிலையின் இரு கண்களும் திறந்த நிலையில் மனித கண்களைப் போலத் தெளிவாக தோன்றியதை கவனித்துள்ளனர். இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து, “இது தெய்வ அருள் வெளிப்பாடு” என நம்பிக்கையுடன் பேசுகின்றனர்.

சில மணி நேரங்களிலேயே இந்த தகவல் சுற்று பகுதிகளுக்கு பரவியதால், கோவிலுக்கு பெரும்பாலான பக்தர்கள் திரண்டு, அந்த காட்சியை காண வரிசையாக காத்து நிற்கின்றனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினரும், பிரதேச மக்கள் தலைவர்களும் விசாரித்து வருகின்ற நிலையில், இந்த நிகழ்வு வவுனியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
At the Aladip Pillaiyar Temple in Thonikkal, Vavuniya, a Ganesha statue that always had closed eyes was seen with open eyes today. Devotees were shocked and gathered at the temple to witness the sight. The incident has created excitement in the area.


