இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்கப் பகுதி தொடர்ந்து நிலைத்திருப்பதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகளவான பலத்த மழை பெய்யலாம்.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
The Department of Meteorology has forecasted that a low-pressure area persisting near Sri Lanka will keep the sky mostly cloudy across the country. Intermittent rain or thundershowers are expected in the Northern, North Central, Eastern, and Uva provinces, and Hambantota district. Other areas may experience scattered rain or thundershowers after 1:00 PM. Heavy rainfall exceeding 100 mm is possible in parts of the Northern and Eastern provinces, with moderate to heavy falls (over 75 mm) expected elsewhere. Additionally, misty conditions are anticipated in the early morning in the Western, Sabaragamuwa, Central, and Southern provinces. The public is advised to take necessary precautions against temporary strong winds and lightning during thundershowers.



