Monday, November 17, 2025

வாகன விபத்தில் இருவர் பலி!

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மட்டக்களப்பு திசை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதினால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த பாதசாரி சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத போதிலும், அவர் அப்பகுதியில் இருந்த யாசகர் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், பல்லேபொல – மடவளை வீதியில் நாரங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பல்லேபொலை திசையிலிருந்து மடவளை திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் வம்பட்டுயாய, நாலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. மஹவெல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Two separate fatal accidents were reported, one in Batticaloa and one in Matale. In the first incident on the Batticaloa-Kalmunai Road in Arayampathy, a pedestrian, identified as a beggar in the area, was fatally struck by a lorry heading towards Batticaloa. The lorry driver was arrested and remanded until the 25th, and Kattankudy Police are investigating. In the second incident on the Pallepola-Madawala Road in Narangamuwa, a head-on collision between two motorcycles killed a 26-year-old youth from Wambatuwaya, Nalanda, with both riders initially admitted to Matale Hospital. Mahawela Police are conducting further inquiries.

download mobile app

Hot this week

ஒரு மணி நேர திருமணம்; மணபெண்ணுக்கு மாப்பிள்ளை அரங்கேற்றிய கொடூரம்!

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும்,...

Vacancy

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய செயலி அறிமுகம்!

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி (App) ஒன்று...

நள்ளிரவில் திருகோணமலையில் பதற்றம்; அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்!

திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்துச்...

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு; வைரலான வீடியோ!

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த...

Topics

திருமணமாகி 13 நாட்களில் சோகம்; புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை!

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம், திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை...

கடல் அலையில் சிக்கி இருவர் பலி; ஒருவர் மாயம்!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியதில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு பெண் கைது!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img