திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு குரல் பதிவில், குறித்த சிலை அகற்றப்பட்டமைக்காக அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குறித்த குரல் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது: “இன்று காலை 8 மணியளவிலே அடாவடியாக அந்தச் சிலை கொண்டு வந்து வைக்கப்பட்டபோது, உடனடியாக அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்குத் தொலைபேசி அழைப்பு எடுத்துப் பேசப்பட்டது. இதன் விளைவாக, வெறும் 3 மணித்தியாலங்களுக்குள் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அந்தச் சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போது விசேட பாதுகாப்பு அணியினர் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக நாளையதினம் (17) காலை திருகோணமலை மாநகரசபை உறுப்பினர்களை நகரசபையில் ஒன்று கூடுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட குகதாசன் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
A Buddha statue placed by force on the Trincomalee beachfront was immediately removed by the Police. MP R. Shanakiyan released a voice recording thanking Minister Ananda Wijepala for the swift removal, stating that the statue, which was forcibly placed at 8:00 AM, was removed within three hours following his telephone call to the Minister. Special security forces are now reportedly on duty at the site. Furthermore, Trincomalee District MP Kugathasan has called for an urgent meeting of the Trincomalee Municipal Council members tomorrow (17) morning to discuss further action, including the decision to file a case and consult with lawyers regarding the incident.



