குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும், சோனி ஹிம்மத் ரத்தோட் என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு மாப்பிள்ளைக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் வலைவீச்சு
முன்னதாக, மாப்பிள்ளை சாஜனும், மணமகள் சோனியும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு பழக்கமானவர்கள். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று திருமண சேலை மற்றும், பணம் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியை எடுத்து மணமகள் சோனியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். மேலும், சோனியின் தலையைச் சுவற்றில் வேகமாக மோதியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இளம்பெண் சோனி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சோனியைக் கொலை செய்துவிட்டு சாஜன் அங்கிருந்து தப்பியோடினார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த பொலிஸார், உயிரிழந்த சோனியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சாஜன் பரய்யாவை பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
திருமண தினத்தன்று மணமகளை மாப்பிள்ளை அடித்துக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
A tragic incident occurred in Bhavnagar, Gujarat, where a bridegroom, Sajan Paraiya, allegedly murdered his bride, Soni Himmat Rathod, just an hour before their wedding ceremony. The couple, who had reportedly been living together for a year and a half, got into a heated argument over issues related to a wedding saree and money. In a fit of rage, Sajan severely assaulted Soni with an iron rod and smashed her head against a wall, causing her death at the scene. Sajan immediately fled after the murder. Police have recovered the body and are intensely searching for the absconding groom, Sajan Paraiya.


