பரகஹதெனிய-மாவதகம வீதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட மற்றுமொரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறுகம்பை பகுதியில் இதேபோன்று வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறான நடத்தையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், கண்டி பிரதேசத்திலும் இவ்வாறான செயலில் ஈடுபட்ட மற்றுமொரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநாகரீகமான நடத்தை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: குறித்த சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு வெளிநாட்டுப் பெண்களைப் பார்த்து அநாகரீகமாக நடந்துகொண்ட காணொளி, கடந்த சில நாட்களாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபர் நேற்று (17) சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் கண்டிப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல், மாவதகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என்றும், இந்தச் சந்தேக நபர் மீது ஏற்கனவே பல போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகச் சுற்றுலாப் பொலிஸ் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Another man has been arrested in the Paragahatheniya-Mawathagama area for engaging in inappropriate behavior towards foreign female tourists. This arrest follows a similar one made yesterday in Arugam Bay and another in Kandy. The latest suspect was apprehended yesterday (17) by the Tourist Police Division in Kandy after a video circulated on social media showing him behaving indecently towards foreign women while traveling in a three-wheeler. The arrested suspect is a 32-year-old man from the Mawathagama area, Kurunegala, who is also known to have several pending drug-related cases. The Tourist Police Division stated that the suspect is scheduled to be produced before the court.



