வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்துடன் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The Department of Meteorology forecasts that intermittent rain is likely in the Northern, North Central, and Eastern provinces. Rain or thundershowers are expected in the Western, Sabaragamuwa, Southern, and Uva provinces, and Nuwara Eliya district, after 1:00 PM. Misty conditions may prevail in some areas of the Sabaragamuwa, Central, Uva, and Southern provinces during the morning hours. The public is advised to take necessary precautions to minimize risks from temporary strong winds and lightning during thundershowers.


