இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன இறக்குமதி உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சொகுசு வாகன இறக்குமதி விவரம்
சமீபத்திய சொகுசு உயர் ரக வாகன இறக்குமதியில் Mercedes-Benz முதலிடத்தில் உள்ளது.
-
மொத்தமாக 28 புதிய Mercedes-Benz வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
மேலும் 5 போர்ஷேக்கள் (Porsche), 4 பென்ட்லிகள் (Bentley), மற்றும் ஒரு லம்போர்கினி (Lamborghini) ஆகிய வாகனங்களும் இதில் அடங்குகின்றன.
பயன்படுத்தப்பட்ட (Pre-owned) வாகனப் பிரிவின் முன்னணியிலும் Mercedes-Benz உள்ளது.
-
மொத்தம் 54 pre-owned Benz வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 18 C-Class, 13 E-Class, 1 S-Class மற்றும் 12 GLB மொடல்கள் இடம்பெற்றுள்ளன.
-
பிற சொகுசு வாகனப் பிரிவுகளில் Audi வாகனங்கள் 37 பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக A3 மொடல்கள் 28 இடம்பெற்றுள்ளன.
-
அத்துடன் Lexus வாகனங்கள் 15 பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், BMW வாகனங்கள் 17 பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொது மற்றும் மின்சார வாகனப் பதிவுகள்
மொத்த வாகனப் பதிவுகள் 380 ஆக இருந்தபோது, அதில் பெரும்பாலானவை ரூ. 5 மில்லியனுக்கும் குறைவான விலையில் விற்கப்படும் BAW (263) மற்றும் Wuling (79) வாகனங்களாகும்.
மொத்தமாக 4,025 மின்சார வாகனங்கள் (EVs) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய 115 மின்சார SUV வாகனங்கள் (EVs) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் GAC – 46, Changan – 30 மற்றும் BYD வாகனங்கள் 27 (இதில் ATTO-2 மொடல் மட்டும் 19) அடங்கும்.
இருசக்கர மின்சார வாகனப் பதிவுகள் 3,478 ஆகும். இதில் Yadea வாகனங்கள் 1,799 ஆக இருந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அரசாங்கத்தின் வருவாய் ரூ.154.5 பில்லியனால் அதிகரித்துள்ளது. இதில் 63.6% வாகன இறக்குமதியிலிருந்து வந்த வருவாய் என மதிப்பிடப்படுகிறது. இதற்கமைய செப்டெம்பர் மாதத்தில் சொகுசு வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 98 பில்லியன் (9,800 கோடி) வரி வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recent vehicle registration data indicates a surge in luxury vehicle imports in Sri Lanka.
-
New Luxury Imports: Mercedes-Benz leads the segment with 28 new registrations, followed by 5 Porsches, 4 Bentleys, and 1 Lamborghini.
-
Used Luxury Imports: Mercedes-Benz also dominates the used sector with 54 registered vehicles (including 18 C-Class, 13 E-Class, and 12 GLB models). Other registered used luxury vehicles include 37 Audis (28 being A3 models), 17 BMWs, and 15 Lexus vehicles.
-
Overall Registrations: Out of 380 total vehicle registrations, the majority were budget vehicles like BAW (263) and Wuling (79), priced below Rs. 5 million.
-
Electric Vehicles (EVs): A total of 4,025 EVs were registered. 115 electric SUVs were registered (GAC-46, Changan-30, BYD-27). 3,478 electric two-wheelers were registered, with Yadea dominating at 1,799 units.
-
Government Revenue: The Government’s revenue increased by Rs. 154.5 billion in September compared to the previous year, with 63.6% of this increase, or Rs. 98 billion, estimated to be from luxury vehicle imports.



