கேகாலையில் மாவனெல்ல – ஹெம்மாத்தகம வீதியில் 09வது கிலோ மீட்டர் மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெம்மாத்தகம நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, எதிர் திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
![]()
மேலதிக விசாரணை
இதன்போது, பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் இரண்டு பெண் பயணிகள் மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, சிகிச்சை பலனின்றி அவர்களில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹெம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மாவனெல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹெம்மாத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A young woman was killed in a road accident near the 9th kilometer post on the Mawanella-Hemmathagama road in Kegalle. The accident occurred when a three-wheeler traveling towards Hemmathagama collided head-on with an oncoming lorry. The three-wheeler driver and two female passengers sustained serious injuries and were admitted to Mawanella Hospital, where one of the women succumbed to her injuries. The deceased victim was identified as a 29-year-old resident of the Hemmathagama area. The body has been placed in the Mawanella Hospital mortuary, and Hemmathagama Police are conducting further investigations.


