Thursday, November 20, 2025

பாலியல் தொல்லை; சிறுமி தற்கொலை முயற்சி

மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள ஒரு சம்பவத்தில், பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.

சம்பவம் வருமாறு: சிறுமி ஒருவர் வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்துகொண்ட இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி வீட்டின் கதவை மூடியுள்ளார். எனினும், அந்த இளைஞன் யன்னல் ஊடாகச் சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்ததோடு மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அவன் கதவு மீது கல்லெறிந்து தொந்தரவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறுமி, தற்கொலை முயற்சியில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.

எனினும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சைகளைப் பெற்று தற்போது ஆரோக்கியம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து குறித்த இளைஞர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரைத் தேடும் பணிகளில் அந்நாட்டுக் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பு: எந்தவொரு சந்தர்ப்பமாக இருந்தாலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவு தவறானதாகும். மன அழுத்த காலங்களில் நீங்கள் உதவி தேட வேண்டியது அவசியம்.

A distressing incident was reported in the Alanganallur area of Madurai, Tamil Nadu, where a minor girl attempted to take her own life after being subjected to sexual harassment. An individual, aware that the girl was alone at home, attempted to sexually harass her. Although the girl managed to close the door, the young man reportedly made obscene gestures through the window, issued threats, and threw stones at the door. Due to the psychological trauma, the girl attempted suicide but was admitted to the hospital and is now recovering. The suspect has gone into hiding, and the local police are actively searching for him.

(Note: Suicide attempt is always wrong, and seeking help during distress is important.)

Hot this week

சிகை அலங்கார நிலையம் சர்ச்சை; அழகக சங்கங்களின் கண்டனம்

வடமாகாணத்திற்குட்பட்ட வன்னிப் பகுதியில் இராணுவத்தினரால் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே...

ஈக்வடோரில் பஸ் விபத்து; 21 பயணிகள் பலி!

ஈக்வடோரில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான குவாரந்தா - அம்பாடோ வீதியில்...

நொடியில் இளம் பெண் உயிர் பிரிந்தது

கேகாலையில் மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியில் 09வது கிலோ மீட்டர் மைல்கல்லுக்கு...

பாடசாலை மாணவர்களில் புகைத்தல் அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச...

வெளிநாட்டவர்களின் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் புதிய திருத்தம்!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

Topics

கொட்டாஞ்சேனை படுகொலை; சந்தேகநபர் ‘ஐஸ்’ உடன் கைது!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த துப்பாக்கிதாரி,...

மஹியங்கனையில் கொலை; மனைவியும் கள்ளக்காதலனும் கைது!

மஹியங்கனைப் பொலிஸாரால் மனிதக் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும்,...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img