யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை வீதி – ஆனைப்பந்திப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய கனகசுந்தரம் நந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும்
இவர் தனிமையில் வசித்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் இவருடைய நடமாட்டம் இன்மையால் அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

இதன்போது அவர் கட்டில் மீது சடலமாகக் கிடப்பது அவதானிக்கப்பட்டது. பின்னர் சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
A 62-year-old woman named Kanagasundaram Nandini, a resident of the Anaipanthi area on the Point Pedro Road in Jaffna, was found dead at her home where she lived alone. Concerned neighbors checked on her after noticing her absence since last Tuesday. She was found deceased on her bed. The body has been sent to the Jaffna Teaching Hospital for a post-mortem examination. The sudden death inquiry was conducted by the Sudden Death Inquirer, Namasivayam Premakumar.


