அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மகன், தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த 22 வயதுடைய அவரது மகன் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அப்போது எதிர்வரும் 28ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர், அந்தக் கைதி சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டு பேருந்தில் ஏற்றுவதற்கு கொண்டு செல்லும்போது, தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

திருட்டுச் சம்பவம்
அந்த இளைஞன், தாயின் கழுத்தில் இருந்த சங்கிலி வளைந்திருப்பதாகவும், அதனைச் சரி செய்து தருவதாகவும் கூறி, போலியான நகையை வழங்கிவிட்டு, குறித்த உண்மையான நகையைத் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்துப் பணத்தை பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவர் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் எனவும் கூறப்படுகிறது. தலைமறைவாகியுள்ள கைதியைத் தேடும் பணியில் மூதூர் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
A 22-year-old man from Mutur Alim Nagar, who was arrested for stealing his mother’s jewelry and produced before the Mutur Magistrate’s Court today (20), has escaped and gone into hiding. The arrest was based on a complaint filed by his mother at the Mutur Police Station.
The Magistrate ordered the suspect to be remanded until November 28th. However, while being handed over to prison officials and taken to board the bus, the suspect fled. The young man is known to be addicted to drugs. He allegedly stole the chain from his mother by pretending it was bent and replacing it with a fake piece before pawning the original for money at a private finance company. Mutur Police are currently searching for the escapee.


