மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒரு பெண் மற்றும் இரண்டரை வயதுக் குழந்தை உட்பட மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் இரவு 9.20 மணியளவில் மாவனெல்லை – ரம்புக்கனை வீதியால் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீதுதான் தலகொல்லப் பகுதியில் இந்த பாரிய மரம் சரிந்து வீழ்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற சமயத்தில் முச்சக்கர வண்டிக்குள் குழந்தை உட்பட நான்கு பேர் சிக்கியிருந்தனர். இவர்களைப் பிரதேச மக்களும் பொலிஸாரும் உடனடியாக இணைந்து மீட்டெடுத்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்தவர் 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த இரண்டரை வயதுச் சிறுமி, 48 வயதுப் பெண் மற்றும் 57 வயதுடைய ஆண் ஒருவர் என மூவரும் தொடர்ந்தும் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரம் சரிந்து வீழ்ந்ததில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லொறிக்கும், அருகிலிருந்த கடை ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மரம் விழுந்த காரணத்தினால் மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்லப் பகுதியில் போக்குவரத்து தற்போது முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
எனவே, வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
One person died and three others, including a two-and-a-half-year-old child, were injured after a large tree fell onto a three-wheeler traveling on the Mawanella – Rambukkana road in the Thalagolla area at 9:20 PM yesterday (23). The deceased was identified as the 37-year-old three-wheeler driver. The fallen tree also damaged a parked lorry and a nearby shop, leading to the complete blockage of traffic on the Mawanella – Rambukkana road, and police have advised the public to use alternative routes.



