களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய – ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள் பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்த சிறுமி ஒருவரின் தலை டிப்பர் ரக வாகனத்தில் மோதியதில் அச்சிறுமி உயிரிழந்துள்ளதாக மில்லனியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி பாலர் பாடசாலை முடிவடைந்த பின்னர் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தச் சோகமான விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முச்சக்கர வண்டி மில்லனிய ரன்மினிக பிரதேசத்தை வந்தடைந்தபோது, அதற்கு எதிர்த்திசையிலிருந்து ஒரு டிப்பர் ரக வாகனம் வேகமாக வந்துள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியின் பின் இருக்கையின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமி, வண்டியிலிருந்து தலையை வெளியே நீட்டியவாறு வந்தபோது, எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 4 வயதுச் சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக டிப்பர் ரக வாகனத்தின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மில்லனியப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
A four-year-old girl who was returning home from pre-school in a three-wheeler died after her head hit an oncoming tipper truck in the Millaniya-Ranminiga area of Kalutara district. Police investigations revealed the accident occurred when the girl leaned her head out of the right rear side of the three-wheeler while the tipper was speeding from the opposite direction. Both the driver of the tipper and the driver of the three-wheeler have been arrested in connection with the incident, and Millaniya Police are conducting further investigations.


