இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் அறியவந்ததாவது, 27 வயதான குறித்த பெண் தனது குழந்தையுடன் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போதே இந்த இளைஞன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
அவர் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி இரவு, அதே பகுதியில் உள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டுத் தனது குழந்தையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான ஜனா (வயது 21) என்பவர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமிட்டு அலறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதைக் கண்டவுடன் ஜனா அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
இது குறித்து அந்தப் பெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், திருத்தணிப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜனாவை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜனா திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
A 21-year-old man named Jana was arrested by police in Thiruttani union, Thiruvallur district, India, for attempting to sexually assault a 27-year-old woman who was returning home from church with her child on the night of May 10th. The woman’s screams alerted neighbours, causing the accused, who is a relative from the same village and an employee at a private company in Thiruvallur, to flee. He was arrested yesterday following a complaint lodged by the victim.


