Thursday, December 4, 2025

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் டிசம்பர் 15  ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03) முற்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவை மேலதிக நீதிவான் பிறப்பித்துள்ளார்.

விசாரணையின் போது, கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளைக் காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களைப் பின் தொடர்ந்து பயணித்த கார் ஒன்றும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் ஏழாலைப் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.

தடுப்புக் காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவை மேலதிக நீதிவான் பிறப்பித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The remand period for the six individuals arrested in connection with the fatal hacking of a youth near Thirunelveli junction in Jaffna last Sunday has been extended until December 15th by the Jaffna Additional Magistrate’s Court, following their appearance in court yesterday (03rd). During the investigation, a car that had reportedly followed the attackers to assist in their escape was also seized by the Jaffna District Crime Prevention Division Police in the Elalai area.

Hot this week

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...

Topics

பகிடிவதை குற்றச்சாட்டில் மாணவர்கள் விளக்கமறியல்

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழை வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும்...

இருளில் மூழ்குமா நயினாதீவு? மக்கள் கவனம் கேட்டு கோரிக்கை

யாழ்ப்பாணம் நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒரு மின் இயந்திரம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img