யாழ்ப்பாணத்தில் இதுவரை 121 பேர் எலிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இப்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேர் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையில் 5 எலிக்காய்ச்சல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நோயினால் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தார்.