வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித ஆசிரியர்களும் 2 விஞ்ஞான ஆசிரியர்களும் 7 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர்களும் பற்றாக்குறையாக உள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் வவுனியா தெற்கு வலய செயலாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபன் வெளியிட்ட ஊடக அறிக்கையில், பாட ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் கல்வியை பாதிக்கின்றதென கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு, நியமனங்களிலும் இடமாற்றங்களிலும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய பாடத்துறைகளில் ஆசிரியர் குறைவால் மாணவர்கள் தரமான கல்வியை பெறுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதால், இது குறித்து உடனடி தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.