நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 23ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெறுகிறது.
கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த மகோற்சவம், தொடர்ந்து 25 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த உற்சவ காலத்தில், சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் இடம்பெறும்.
இந்தத் திருவிழாக்கள் இனிதே நிறைவுபெற்று, நல்லூர் கந்தனின் உற்சவம் முழுமையடையும்.