முல்லைத்தீவு, கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி வசிப்பதாகப் பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி தெரிவித்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், 50 குடும்பங்களுக்கு வீடு அமைக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால், தியோநகர் உட்படப் பல்வேறு பகுதிகளில் காணி மற்றும் வீடற்றவர்களைக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராம சேவையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மூலம் காணியற்ற குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குக் குடியிருப்புகளை அமைப்பதற்கான காணிகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.