சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றக் கட்டடத்தில் இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தினால் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில், 2025 தேசிய இளைஞர் மாநாட்டின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அத்துடன், அவர்களுக்குப் பாராட்டுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இளைஞர் விவகாரங்கள் பிரதியமைச்சர் எரங்க குணசேகர உட்படப் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.