இந்தியாவின் மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்டத்தில், 26 வயது ஆசிரியை மீது 18 வயது மாணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவருக்கு ஆசிரியை மீது ஒருதலைக் காதல் இருந்துள்ளது. ஆசிரியையின் பாசத்தை தவறாகப் புரிந்துகொண்ட மாணவர், வேறு பள்ளிக்கு மாறிய பின்னரும் அடிக்கடி அவரை சந்தித்து வந்துள்ளார்.
சமீபத்தில், சுதந்திர தினத்தன்று ஆசிரியையை சந்தித்த மாணவர், அவரது உடை மற்றும் அழகு குறித்து தகாத முறையில் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த ஆசிரியை, பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த மாணவர், ஆசிரியையைப் பழிவாங்க நினைத்து அவரது வீட்டிற்குச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மாணவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.