கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக, 43 வயதான முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார். இதையடுத்து, இன்று (21) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.