மொனராகலை, ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்தின்போது, மதுபானம் கொண்டு வந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை வளாகத்துக்குள் குறித்த இந்த மூன்று மாணவர்களும் மது அருந்திக் கொண்டிருந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Three students were arrested today at a school in Hulandawa, Monaragala, after they brought and consumed alcohol on the school premises during the International Children’s Day celebration. Police confirmed the arrests were made while the students were drinking inside the school compound.