ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை தொலைபேசிகள் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு அறிமுக நிகழ்வில் சந்தைகளுக்கு அறிமுகமாகியுள்ளன.
இதில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் எஸ் இ 13 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 ஆகிய ஸ்மார்ட் கைக் கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஐபோன் 17 ப்ரோவின் 256 ஜிபி சேமிப்பு வேரியன்ட் $1,099 (இலங்கை மதிப்பில் ரூ. 3,33,451) விலையிலும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி மாடல் $1,199 (இலங்கை மதிப்பில் ரூ. 3,63,792) விலையிலும் கிடைக்கின்றன. இந்தக் கைபேசிகள் காஸ்மிக் ஆரஞ்சு, டீப் ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஐபோன் 17 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ஆம் திகதி தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட் கைபேசிகள் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் உலகளவில் விற்பனைக்கு வரும்.
_______________________________________________________________________
Apple has launched its new iPhone 17 series, which includes the iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max, and iPhone 17 Air. The company also introduced the Apple Watch Series 11, Apple Watch SE 13, and Apple Watch Ultra 3. The new iPhones, available in Cosmic Orange, Deep Blue, and Silver, are priced starting at $1,099 for the iPhone 17 Pro 256 GB model and $1,199 for the iPhone 17 Pro Max 256 GB model. Pre-orders for the iPhone 17 Pro models begin on September 12, with worldwide sales starting on September 19.